திருக்கார்த்திகை தீபமேற்றும் நிகழ்வு இன்று (04) வாழச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் பேத்தாழை பொதுமயானத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு பேத்தாழை விவேகானந்தா சன சமூக நிலையத்தினால் வருடா வருடம் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவது வழக்கமாகும்.
அதேபோன்று இம்முறையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இறந்த உறவுகளை நினைவு கூறும் வகையில் அவர்களது உறவினர்களினால் இன்றைய நாளில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்படும் வழக்கமான செயற்பாடாக இங்கு இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















