Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கடிதமொன்றை கையளித்த மொறட்டுவ பல்கலை மாணவர்கள்

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கடிதமொன்றை கையளித்த மொறட்டுவ பல்கலை மாணவர்கள்

9 months ago
in செய்திகள்

டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று (08) கடிதமொன்றைக் கையளித்தனர்.

ஆளுநர் அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பல்கலைக்கழக மாணவர்களின் உடல் மற்றும் உள நலம் குறித்து ஆளுநர் விசாரித்தறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, பேரிடரின்போது தாம் எதிர்கொண்ட சவாலான அனுபவங்களை மாணவர்கள் ஆளுநருடன் பகிர்ந்துகொண்டனர்.

இதன்போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்களது சக பயணி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் சடலமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் குறித்தும், அந்தத் தருணத்தில் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடி நிலை குறித்தும் ஆளுநரிடம் விவரித்தனர்.

மேலும், மீட்புப் பணிகளுக்காக வருகை தந்த மூன்று கடற்படை வீரர்கள், வெள்ளம் சூழ்ந்த அந்த ஆபத்தான சூழலில் 24 மணி நேரத்துக்கும் மேலாகத் தம்முடன் தங்கியிருந்ததோடு, வெள்ளத்தில் வீழ்ந்த சிலரையும் உயிருடன் மீட்டனர் என்பதையும் மாணவர்கள் ஆளுநரிடம் நினைவுகூர்ந்தனர். இத்தகைய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அந்தக் கடற்படை வீரர்களைச் சிறப்பிக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்குமாறும் மாணவர்கள் ஆளுநரிடம் விசேட வேண்டுகோள் விடுத்தனர்.

மிகவும் ஆபத்தான சூழலில், எவ்வித தாமதமுமின்றி மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிய அனைத்துத் தரப்பினருக்கும், விசேடமாக மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வழிநடத்திய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட மாணவர்கள், இந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.

மாணவர்களால் கையளிக்கப்பட்ட குறித்த கடிதத்தை, ஆளுநர் உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அனுப்பி வைத்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

September 9, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
Next Post
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள வீதியில் துப்பாக்கிகள் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள வீதியில் துப்பாக்கிகள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.