சூடானின் கோர்டோபான் மாகாணத்தின் கலோகி நகரில் ஆர்.எஸ்.எப்., படை நடத்திய ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில், 63 குழந்தைகள், மருத்துவ பணியாளர்கள் உட்பட 114 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
‘இது அப்பட்டமான மனித உரிமை மீறல்’ என, கண்டனம் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, சூடானில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும், சுகாதாரம் உட்பட மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கவும் உலக நாடுகளை வலியுறுத்தி உள்ளது.








