அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பிரேவர்ட் நகரம் வழியாக பயணித்த சிறிய ரக விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரேவர்ட் நகரின் நெடுஞ்சாலையில் விமானத்தை அவசரமாக தரையிறக்கியபோது குறித்த விமானம் கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் காரை இயக்கிய 57 வயது பெண் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். விமானத்தில் பயணித்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








