Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொத்மலை நீர்த்தேக்கத்தின் மீது கனரக வாகனங்கள் பயணிக்கத் தடை

கொத்மலை நீர்த்தேக்கத்தின் மீது கனரக வாகனங்கள் பயணிக்கத் தடை

9 months ago
in செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்கத்தின் மீது கனரக வாகனங்கள் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான 55 ஹெக்டயார் நிலப்பரப்பில் இடம்பெயர்ந்தவர்களை குடியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆராச்சி தெரிவித்துள்ளார்.

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறப்பது தொடர்பில் இநாட்களில் பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை எனவும், அறிவியல் ரீதியிலான தரவுகளின் அடிப்படையில் வான் கதவுகளைத் திறக்க கொத்மலை நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஜே. ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

பணிப்பாளர் நாயகம் நேற்று (09) பிற்பகல் கொத்மலை நீர்த்தேக்க அணைக்கட்டைப் பார்வையிட்ட பின்னர், கொத்மலை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், எதிர்காலத்தில் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறப்பதற்கு முன்னர் மக்களுக்கு அறிவிப்பதற்கு, தற்போது நடைமுறையிலுள்ள முறைமையை விட வேறு முறைமையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

பிரதான வீதிகள் தடைப்பட்டுள்ளதால் நீர்த்தேக்க அணைக்கட்டின் ஊடாக வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நேற்று முதல் அணைக்கட்டின் மீது கனரக வாகனங்கள் பயணிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தடைப்பட்டுள்ள வீதிகள் சீராகும் வரை இலகு ரக வாகனங்கள் மட்டுமே அணைக்கட்டின் மீது பயணிக்க அனுமதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா திலகரத்ன, நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கம்பளை – நுவரெலியா வீதி, இலகு ரக வாகன போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கட்டுகித்துல, ரம்பொடை நீர்வீழ்ச்சி மற்றும் தவலந்தென்ன ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், அவ்விடங்களில் வீதி தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

September 15, 2026
Next Post
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் உணவகம் சீல்!

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் உணவகம் சீல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு