Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீனாவில் 1,400 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை

சீனாவில் 1,400 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை

9 months ago
in உலக செய்திகள், செய்திகள்

சீனாவில், 1,400 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற வழக்கில், அரசு நிதி நிறுவனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சீனாவில், ‘ஹுவராங் இன்டர்நஷனல் ஹோல்டிங்ஸ்’ என்ற அரசு நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் அதிகாரிகள் மீது, சில ஆண்டுகளுக்கு முன் பல ஆயிரம் கோடி ரூபாய் இலஞ்ச குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இது போல பல அரசு நிறுவனங்களிலும் லஞ்ச புகார் எழுந்ததால், அவை குறித்து விசாரிக்க சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உத்தரவிட்டார்.

அப்படி, ஹுவராங் இன்டர்நஷனல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் விசாரித்ததில், அந்நிறுவனத்தின் பொது முகாமையாளர் பய் தியன்ஹுய், 2014 – 2018 வரை பல திட்டங்களின் கொள்முதல் மற்றும் நிதியுதவி செயல்பாடுகளில் சலுகை வழங்க, 1,400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றது தெரிய வந்தது.

அவருக்கு, சீனாவின் தியான்ஜின் நகர நீதிமன்றம், 2024 மே மாதம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர், சீன உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரித்த நீதிமன்றம், ‘பய் தியன்ஹுய், மிக அதிகளவில் லஞ்சம் பெற்றுள்ளார்.அவரது செயல்பாடு அரசு மற்றும் மக்களின் நலன்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது’ எனக்கூறி, மரண தண்டையை கடந்த பிப்ரவரியில் உறுதி செய்தது.

இதன்படி, அவரது மரண தண்டனை நேற்று முன்தினம் (09) காலை தியான்ஜின் சிறையில் நிறைவேற்றப்பட்டது. கடைசி ஆசையாக, தன் குடும்பத்தினரை சந்தித்து பய் தியன்ஹுய் பேசினார். சீனாவில் பொதுவாக விஷ ஊசி அல்லது துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும். பய் தியன்ஹுய்க்கு எந்த முறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது தெரியவில்லை.

பய் திபன்ஹுய் பணியாற்றிய, அதே ஹுவராங் அரசு நிதி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லை ஷாவ்மின் என்பவருக்கும், 2,200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், 2021 ஜனவரியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
மட்டக்களப்பு – கித்துள்குளத்தில் பதிவான அரிய காட்சி

மட்டக்களப்பு – கித்துள்குளத்தில் பதிவான அரிய காட்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு