மட்டக்களப்பு வாகரை கயூவத்தை கடற்கரையில் கரையொதுங்கிய சடலத்தை இனம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிசார் மற்றும் திடீர்மரணவிசாரணை அதிகாரி வேண்டுகின்றார்கள்
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது அல்லது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் காணாமல் போன ஆண் ஒருவரது சடலம் கஜுவத்த கடற்படை முகமை அண்டிய கடற்கரையில் கடந்த (05) கரையொதுங்கியுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்துள்ளனர்

இவரது சடலம் தற்போது வாழைச் சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அல்லது பிற மாவட்டங்களில் உள்ளவர்கள் யாராவது காணாமல் போனால் தயவு செய்து இந்தச் செய்தியை தெரியப்படுத்தி சடலத்தை அடையாளம் காண உதவுமாறு திடீர் மரணவிசாரணையாளர் சபாபதிபிள்ளை இராசகுமார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் சடலம் இனங் காணப்படாமல் விட்டால் அரசாங்கச் செலவில் அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








