தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரட்ன தேரர், இன்று புதன்கிழமை (17) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில், மூன்று சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் முன்நகர்வு பத்திரம் ஊடாக அவர் சரணடைந்ததையடுத்து, தேரரை ரூ.1 இலட்சம் பெறுமதியுள்ள இருவர் கொண்ட சரீரப் பிணையில் விடுதலை செய்ய நீதிமதி உத்தரவிட்டார். மேலும், வழக்கை 2026 ஜனவரி 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதனிடையே, பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 50 பேர் கொண்ட குழுவுடன் அம்பிட்டிய சுமணரட்ன தேரர் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.









