Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இராணுவத்திடமிருந்து மீட்ட கட்டிடத்தை பொதுமக்களுக்கு வாடகைக்கு வழங்குவதற்கு காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை

இராணுவத்திடமிருந்து மீட்ட கட்டிடத்தை பொதுமக்களுக்கு வாடகைக்கு வழங்குவதற்கு காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காரைதீவு பிரதேச சபைக்குச் சொந்தமான இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பல தசாப்தங்களுக்கு பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்டு சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள கட்டிடத்தினை தற்காலிக மதிப்பீடொன்றினை பெற்று அதனடிப்படையில் கேள்விகள் கோரப்பட்டு கட்டிடத்தை வாடகைக்கு வழங்குவதற்கு காரைதீவு பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

காரைதீவு பிரதேச சபையின் 04 வது சபையின் 05 வது மாதாந்த சபைக் கூட்டம் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் நேற்று (16) நடைபெற்ற போதே இந்த தீர்மானம் சபையோரால் நிறைவேற்றப்பட்டது. மேலும், கடந்த சபைக் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்காக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் 08 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

அத்துடன் 2025ம் ஆண்டில் கிடைக்கப் பெற்ற மேலதிக பெறுவனவுகளுக்காக தயாரிக்கப்பட்ட குறைநிரப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டதுடன் வீதி விளக்குகளை இயக்கம் செய்வதற்கான கடமையில் ஈடுபடுத்தப்படும் நபர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை சபை நிதியிலிருந்து வழங்குவதற்கு சபை அனுமதி பெறப்பட்டது.

மேலும் மாளிகைக்காடு உப நூலகத்திற்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை பாதுகாப்பாக அலுமாரி ஒன்றை கொள்வனவு செய்வதற்கும், மாவடிப்பள்ளியில் புதிதாக இரண்டு இறைச்சிக் கடைகளை நடாத்துவதற்கும் பதிலீட்டு அடிப்படையில் கடமையாற்றிவரும் ஊழியரின் சேவைக்காலத்தினை மேலும் 06 மாதங்களுக்கு நீடிப்பதற்கு உள்ளூராட்சி ஆணையாளரின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளவும் சபையின் அனுமதி பெறப்பட்டது.

சபையின் செயலாளராக கடமையாற்றும் அ.சுந்தர குமார் விரைவில் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளதாலும், ஓய்வுக்கான முன் விடுமுறை கோரி விண்ணப்பித்துள்ளமையினாலும் பதில் செயலாளராக திருமதி வனிதா டேவிட் அமிர்தலிங்கம் என்பவரை நியமிப்பதற்கு சபை அனுமதி வழங்கியது. இதன்போது உறுப்பினர்கள் பலரும் பல்வேறுபட்ட மக்களின் பிரச்சினைகளை சபைக்கு முன்வைத்து உரையாற்றினர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
சுனாமிக்காசை சுருட்டிய முன்னாள் ஜனாதிபதி-மக்களுக்கு நிவாரணங்கள் சென்றடைய வேண்டும்-ஸ்ரீநேசன்

சுனாமிக்காசை சுருட்டிய முன்னாள் ஜனாதிபதி-மக்களுக்கு நிவாரணங்கள் சென்றடைய வேண்டும்-ஸ்ரீநேசன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு