Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுனாமிக்காசை சுருட்டிய முன்னாள் ஜனாதிபதி-மக்களுக்கு நிவாரணங்கள் சென்றடைய வேண்டும்-ஸ்ரீநேசன்

சுனாமிக்காசை சுருட்டிய முன்னாள் ஜனாதிபதி-மக்களுக்கு நிவாரணங்கள் சென்றடைய வேண்டும்-ஸ்ரீநேசன்

7 months ago
in அரசியல், காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்தகாலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நிவாரண நடவடிக்கைகளில் மோசடிசெய்வது ஊழல்செய்வது கையாடல் செய்வது என்பது இதுவரையில் எந்த முறைப்பாடும் இல்லை.ஆனால் அடிப்படைவாதத்தினை பேசும் சில எதிர்க்கட்சிகள் சில விடயங்களை ஊதிபெரிதாக்கும் செயற்பாட்டினை முன்னெடுப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

சுனாமி அனர்த்த காலத்தில் நிவாரணத்திற்காக மக்களுக்குவந்த பணத்தினை ஹெல்பின் அம்பாந்தோட்டை என்ற திட்டத்தினூடாக வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டு மக்களுக்கு செல்லாமல் முன்னாள் ஜனாதிபதி அவர்கள் அனுபவித்துச் சென்றார்.

சில எதிர்க்கட்சிகள் ஆட்சிமாற்றத்தினை விரும்புகின்றார்கள்,ஆட்சிமாற்றம் ஒன்றினை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர்.இலங்கை தமிழரசுக்கட்சியை பொறுத்தவரையில் ஆட்சிமாற்றத்திற்கோ அமைச்சு பதவிக்கோ ஆசைப்படும் கட்சியாக இருக்கபவில்லை.

மட்டக்களப்பு செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் சூறாவளி மண் சரிவு அர்த்தங்கள் காரணமாக எங்களுடைய மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் போன்ற இடங்களில் இந்த பாதிப்புகள் இருக்கின்றன வடக்கு கிழக்கு பொருத்தமட்டில் வெள்ளத்தால் ஏற்பட்ட அனத்தம் என்று சொல்லலாம். அதில் வடக்கு பகுதியில் சூறாவளியும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. மலையகத்தை பொருத்தமட்டில் மலையகம் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கின்றது அதாவது மலை வீழ்ச்சியின் காரணமாக குளங்களில் நீர் அதிகரித்து இருந்தபடியால் அவற்றை திறக்க வேண்டிய ஒரு நிலைமையில் திறக்கப்பட்டதனால் மண் சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன மழை வீழ்ச்சியால் அந்த மண்சரிவுகள் அதிகமாக ஏற்பட்டிருக்கின்றன.

நிவாரணத்துக்கான நிதியங்கள் அனேகமாக எல்லா இடங்களிலும் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அறிகின்றோம். எனவே அந்த உரியவர்களை பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய நிவாரணங்களை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. வீடுகள் கழுவுகின்ற விடயம் அதேபோன்று வீடுகளில் பாதிப்பு சம்பந்தமான விடயம் உணவு பொருள் சம்பந்தமான விடயம் பாடசாலை மாணவர்கள் கற்றல் உபகரணம் சம்பந்தமான விடயம் தொழிற்சார் பாதிப்புகளின் போது அவர்களுக்கு இழப்புகள் கொடுக்க வேண்டிய விடயம் என்றெல்லாம் பல விடயங்கள் காணப்படுகின்றன.

அதேபோன்றுதான் இன்னும் சொல்லப்போனால் மீனவர்கள் அன்றாடம் தொழில் செய்ய முடியாத நிலையில் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலைமை இருக்கின்றது. அதைவிட விவசாயிகளின் வேளாண்மை செய்கின்ற நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது 1000 கணக்கான ஏக்கர் என்று கூட சொல்லலாம்.

எங்களுக்கு அவ்வப்போது முறைப்பாடுகள் கிடைக்கின்றன இந்த முறைப்பாடுகளை நாங்கள் உரிய பிரதேச சபை செயலாளர் அரசாங்க அதிபர் போன்றவர்களுக்கு நாங்கள் அறிவித்துக் கொண்டிருக்கின்றோம்.

அதேபோன்று அமைச்சர் மட்டத்தில் கதைக்க வேண்டிய விடயங்களையும் அவ்வப்போது நாங்கள் கதைக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் கதைக்கின்றோம் பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இருந்தாலும் சில சில முறைப்பாடுகள் கிடைக்கின்ற நேற்றும் கூட ஏறாவூர் ஒரு பக்கமாக இருந்தும் தன்னாமுனை பக்கமாக இருந்தும் அதேபோன்று படுவான்கரை பக்கம் இருந்தும் நாங்கள் ஆணைகட்டியவெளி போன்ற பிரதேசங்களுக்கு சென்றபோது அங்கு சில முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றது.

அந்த முறைப்பாடுகளை உரிய அதிகாரிகளுக்கு அவ்வப்போது நாங்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம் எங்களுடைய விருப்பம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்குரிய பாதிப்புக்கு ஏற்ற விதத்தில் இந்த நிவாரணங்கள் உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதை கூறிக் கொள்கிறேன்.

வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு இந்த இயற்கை தோணாக்கள் அடைபட்டுப் போனதும் வடிகால்கள் முறையாக சுத்திகரிக்கப்படாதும் காரணமாக இருக்கலாம் இந்த முறை சித்தாண்டி பகுதியில் வெள்ளப்பெருக்கு காணவில்லை என்று பார்த்தால் அந்த பகுதியில் இருக்கின்ற வடிகான்களை துப்புரவு செய்ததன் காரணமாக அந்த இடத்தில் வெள்ளப்பெருக்கு அவதானிக்க முடியாமல் இருந்தது ஆனால் தன்னாமுனை பகுதிகளில் பல வீடுகள் வெள்ளத்தால் மூடப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது எனவே அந்த இடத்தில் அந்த தோணாக்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

வீதிகள் அமைக்கின்ற போது வடிகால்கள் அமைக்கப்படாமல் இருப்பதனாலும் இந்த வெள்ளப்பெருக்கள் ஏற்படக்கூடிய ஒரு நிலைமையை நாங்கள் அவதானிக்க கூடிய இருக்கிறது நேற்றைய தினம் நாங்கள் ஆணைகட்டியவெளிக்கு சென்றபோது இந்த சமூலையடி வீதி பல கிராமங்கள் உரிய மக்கள் பயணிக்கின்ற ஒரு வீதி உடைந்து காணப்படுகின்றது. அதனை முறையாக கட்டித் தர வேண்டும் என்று அங்கு இருக்கின்ற மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டிருந்தார்கள் அதற்குரிய நிதி ஒரு சுமார் ஒரு 70 லட்சம் ஒதுக்கப்பட்டு இருந்தாலும் அந்த நிதி போதாது என்ற கருத்து இடம்பெற்றிருக்கின்றது.

இந்த அனர்த்தம் என்பது முற்றிலும் முடிந்து விடவில்லை மழை வீழ்ச்சி முடிந்து எங்களுக்கு அடுத்த பருவ காலம் ஆரம்பிக்கப்படவில்லை என்றபடியால் தொடர்ந்தும் இந்த மழைவீழ்ச்சியை ஏற்படக்கூடியதும் காற்றுகள் வீசக்கூடிய ஒரு நிலைமையும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய நிலைமை இருக்கின்றபடியால் உரிய அதிகாரிகள் அரசாங்கம் பொறுப்புக்குரிய அமைச்சர் அதிகாரிகள் கவனமாக இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தினை நான் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
Next Post
ஏறாவூரில் விடுதியில் தங்கி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது

ஏறாவூரில் விடுதியில் தங்கி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.