Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர்கள் மீது 15 பேர் கொண்ட குழு வாள் வெட்டு தாக்குதல்

வாகரையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர்கள் மீது 15 பேர் கொண்ட குழு வாள் வெட்டு தாக்குதல்

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

விசேட அதிரடிப்படையினருக்கு சட்டவிரோத கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பாக தகவல் வழங்கிய இருவர் மீது ஆவா வாள்வெட்டு குழு என சந்தேகிக்கப்படும் சிலர் தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளதுடன் தாக்குதல் மேற்கொண்ட குழு தப்பி ஓடியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவார்கள் தொடர்பாக வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதாக சம்பவ தினமான நேற்று மாலை 6.00 மணியளவில் மாங்கேணி பகுதியில் வைத்து இருவர் மீது மோட்டார் சைக்கிள்களில் சென்ற 15 பேர் கொண்ட ஆவா வாள்வெட்டு குழுவினர் என சந்தேகிக்கப்படும் சிலர் தாக்குதல் மேற்கொண்டதில் 40 வயதுடைய செல்வபுரம் மாங்கேணி சேர்ந்த பொன்னம்பலம் ஜெயச்சந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த 38 வயது பொன்னம்பலம் சுரேந்திரன் ஆகிய இருவரும் படுகாயமடைந்ததையடுத்து தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த இருவரும் மட்டு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்துக்கு விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikal

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

July 31, 2026
நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
Next Post
மனம்பிட்டி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்திருந்தாலும் அபாய நிலையில் இல்லை

மனம்பிட்டி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்திருந்தாலும் அபாய நிலையில் இல்லை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு