வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயம்த்தில், திருவெம்பாவை விரதத்தினை முன்னிட்டு ஆண்டு தோறும் நடத்தப்படும் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்வு எதிர்வரும் 28.12.2025 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த ஆன்மிக நிகழ்வில் திருவாசகம் முற்றோதலில் பங்கேற்க விரும்பும் அனைத்து பக்த அடியவர்கள், பாடசாலை மாணவர்கள், அறநெறி மாணவர்கள் மற்றும் அனைத்து குருமார்கள் கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.









