பாராளுமன்ற உறுப்பினர் M.L.A.M.ஹிஸ்புல்லாவிற்கு எதிராக முகப்புத்தகத்தில் அவதூறு பரப்பிய 10 பேருக்கு எதிரான வழக்கு நேற்றய தினம் (23) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த அடிப்படையில் 10 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 17 வழக்குகளை சம்மாந்துறை நீதவான் ரஞ்சீத்குமார் பரிசீலித்து ஜனவரி 12ஆம் திகதி வழக்கை ஒத்தி வைத்த்தார்.










