Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 20வது ஆண்டு நினைவேந்தலும் நீதி வேண்டி ஆர்ப்பாட்டமும்

அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 20வது ஆண்டு நினைவேந்தலும் நீதி வேண்டி ஆர்ப்பாட்டமும்

8 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் கடந்த 2005ம் ஆண்டு கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

வாலிபர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் க.சோபனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள், இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட கட்சியின் உள்ளுராட்சிமன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பான விசாரணைகளை மீளவலியுறுத்தும், நீதிகோரும் முகமாகவும் மட்டக்களப்பு காந்திப் பூங்காவிலிருந்து மட்டக்களப்பு மாநகரசபை வரையில் பேரணியொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மாமனிதர் ஜோசப் எம்.பியின் படுகொலைக்கு நீதிவேண்டும்,அனுர அரசே நீங்களும் உடந்தையா,சர்வதேசமே 20 வருடங்கள் கடந்தும் நீதியில்லை,கொலையாளியை கண்டுபிடிக்க 20 வருடமா போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மாநகரசபை மண்டபம் வரையில் ஊர்வலம் சென்றது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப்படத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் வாலிபமுன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோபனன் ஆகியோரால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்துஅருட்தந்தை ஜெகதாஸ் அடிகளார் உட்பட கலந்துகொண்டவர்களினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

இன்றைய நிகழ்வில் விசேடமாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் இலங்கை வரலாற்றுப் பின்னணியில் சமஸ்டித் தீர்வினைப் பெறல் என்ற தலைப்பில் சமஸ்டித் தீர்வு தொடர்பில் ஜோசப் பரராஜசிங்கத்தின் முனைப்புகள் தொடர்பில் நினைவுப்பேருரை நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது நினைவுரையாற்றிய பேராசிரியர் சர்வேஸ்வரன் தமிழரசுக்கட்சியினரால் கௌரவிக்கப்பட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
கிராம உத்தியோகத்தரைத் திட்டி அச்சுறுத்தியதாக NPP புத்தள உறுப்பினர் கைது

கிராம உத்தியோகத்தரைத் திட்டி அச்சுறுத்தியதாக NPP புத்தள உறுப்பினர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.