டக்ளஸ் பிணை தொடர்பில் சுமந்திரனுடன் சீ.வி.கே சிவஞானம் தொலைபேசி வாயிலாக உரையாடியதை திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா கொழும்பு ஊடகத்திற்கு தெரிவித்தாக உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
டக்ளஸ் பிணை விடயத்தில் தமிழரசுக்கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தால் தமது கட்சியுடன் சீ.வி.கே சிவஞானம் ஏற்படுத்திய இரகசிய ஒப்பந்தம் அம்பலப்படுத்தப்படும் என்ற செய்தியும் தலைமைக்கு மிக தெளிவாக கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுமந்திரன் வழக்கு விடயங்களில் நேரடியாக வெளிவருவது கொள்கை ரீதியாக மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்பதால் அவரின் ஆலோசனையில் கொழும்பில் சட்டத்தரணி ஒழுங்கு செய்து தரப்படும் என்று EPDP தரப்பிற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது என்றும் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா உறுதிப்படுத்தியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த செய்தி தமிழ் தேசிய மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், குறித்த குற்றச்சாட்டை தமிழரசு கட்சி நிராகரிக்குமா? அல்லது சர்ச்சைக்கு பதில் கூறாமல் அமைதியாக விட்டுவிடுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.








