Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய ஆறாம் தர பாடப்புத்தகத்தில் ஓரின செயற்கையாளர்களின் இணையதள முகவரி இணைப்பு!

புதிய ஆறாம் தர பாடப்புத்தகத்தில் ஓரின செயற்கையாளர்களின் இணையதள முகவரி இணைப்பு!

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்ட 6 ஆம் தர ஆங்கில மொழிப் பாடத்திற்கான கற்றல் தொகுதியில் (Module), பொருத்தமற்ற மற்றும் ஆபாசமான இணையத்தளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பாடப்புத்தகத்தில் உள்ள ஒரு பக்கத்தில் மாணவர்களுக்கான மேலதிக வாசிப்புக்காக வழங்கப்பட்டிருந்த இணையத்தள முகவரி, ஆபாசமான உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு தளத்திற்கு இட்டுச் செல்வதாகப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வுகளில், வழங்கப்பட்ட இணைய முகவரி தவறானது மற்றும் மாணவர்களுக்குப் பொருத்தமற்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கற்றல் தொகுதியை மாகாண ரீதியாக விநியோகிக்கும் பணிகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தவறு தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டதா என்பது குறித்து தேசிய கல்வி நிறுவனம் (NIE) விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இன்று (31) கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வெளித்தரப்பு ஒன்றினால் சதித்திட்ட அடிப்படையில் இவ்வாறான கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தாம் சந்தேகிப்பதாக நாலக கலுவெவ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இவ்வாறான முறையற்ற செயலைச் செய்த நபர்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த வெளியீடு இன்னும் இறுதிப் பதிப்பாக அச்சிடப்படவில்லை என்றும், இதன் பொறுப்பு கல்வித் திணைக்களத்தையே சாரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சர்ச்சைக்குரிய பகுதி சட்டபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதையும், பாடத்திட்டத்தில் இது எவ்விதத்திலும் உத்தியோகபூர்வமாக உள்வாங்கப்படாது என்பதையும் செயலாளர் கலுவெவ உறுதிப்படுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!

July 30, 2026
விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை
செய்திகள்

விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை

July 30, 2026
தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
Next Post
குரங்கு தொல்லை கட்டுப்படுத்த துப்பாக்கி வழங்கிய எம்.பி

குரங்கு தொல்லை கட்டுப்படுத்த துப்பாக்கி வழங்கிய எம்.பி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு