2026 ஆம் ஆண்டின் அரச சேவை கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளை முன்னிட்டு, அரச சேவை உறுதியுரை நிகழ்வு இன்று கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு, பிரதேச சபையின் தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச சபை செயலாளரின் நெறிப்படுத்தலின் கீழ் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முப்படையினரையும் உட்பட நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த சகலரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்பின் அரச சேவை உறுதியுரை சத்தமாக மொழியப்பட்டதுடன், தற்போதைய சவால்களை வெற்றிகொள்ள அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அரச ஊழியர்களின் பொறுப்பு மற்றும் பங்களிப்பு குறித்தும் தவிசாளர் குறுகிய உரையொன்றை நிகழ்த்தி ஊக்குவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் அரச ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



















