அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலகம பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 18 மாடி கட்டடமொன்றின் 15ஆவது மாடியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (02) மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








