மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் ‘கல்விச் சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் நமது பங்களிப்பு’ எனும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று (06) இடம்பெற்றது.
இக் கருத்தரங்கு காத்தான்குடி மத்திய கல்லூரியின் 1986ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் 1989ம் வருட உயர்தர வகுப்பு மாணவர்களால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இக் கருத்தரங்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என மூன்று தரப்பினருக்கும் வெவ்வேறு நேரங்களில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இக் கருத்தரங்கின் வளவாளராக கலாநிதி ரவூப் ஸெய்ன் நழீமி வளவாளராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கியிருந்தார்.