Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடப்புத்தகத்தையே சரியாக அச்சிடாத அரசு எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்; நாமல் கேள்வி

பாடப்புத்தகத்தையே சரியாக அச்சிடாத அரசு எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்; நாமல் கேள்வி

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாடப்புத்தகத்தை கூட ஒழுங்காக அச்சிடாத அரசாங்கம் எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்.அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் அது ஒற்றையாட்சிக்கு முழுமையாக எதிரானதாகவும் நாட்டை பிரிக்கும் வகையில் தான் அமையும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்துக்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கவோ நாங்கள் செயற்பட போவதில்லை. ஏனெனில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அரசாங்கத்துக்கே எதிராக அமையும். எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் தவறை சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அரசாங்கத்துக்கு இல்லை.

புதிய கல்வி கொள்கை அரசாங்கத்துக்கு எதிரானதாகவே திரும்பியுள்ளது. இலங்கைக்கு பொருத்தமான வகையில் புதிய கல்வி கொள்கையை அமுல்படுத்த வேண்டுமே தவிர மேற்குலக நாடுகளுக்கு பொருத்தமான வகையில் அல்ல என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தை புத்தகத்தில் இருந்து நீக்குவதாக கல்வி அமைச்சர் குறிப்பிடுகிறார்.இது அரச நிதி முறைக்கேடு இல்லையா, இந்த செயற்பாட்டுக்காக நாங்கள் நிச்சயம் வழக்குத் தாக்கல் செய்வோம்.

ஆட்சிக்கு வந்தவுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டது. பாடப்புத்தகத்தை கூட முறையாக அச்சிடாத அரசாங்கம் எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும். இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் அது ஒற்றையாட்சிக்கு முழுமையாக எதிரானதாகவும் நாட்டை பிரிக்கும் வகையில் தான் அமையும்.

ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்று தேவையற்ற விடயங்களை முன்னெடுக்காமல் பதவி காலத்தை நிறைவு செய்து விட்டு வீடு செல்லுமாறு அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக்கொள்கிறோம் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
ஈரானுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க விரும்பும் டிரம்ப்

ஈரானுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க விரும்பும் டிரம்ப்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு