Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலையில் மாநகரசபை நடவடிக்கைகளுக்கு எதிராக வர்த்தக சங்கத்தின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் மாநகரசபை நடவடிக்கைகளுக்கு எதிராக வர்த்தக சங்கத்தின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

8 months ago
in செய்திகள்

திருகோணமலை மாநகரசபையின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை வர்த்தக சங்கத்தினரால் இன்று (12) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதான வீதி வழியாக மாநகரசபை வரை சென்றது. அங்கு மாநகரசபை கட்டிடத்திற்கு முன்பாக திரண்ட வர்த்தகர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது வர்த்தகர்கள், வீதியோர வியாபாரிகளை தடை செய், வெளி ஊர் தற்காலிக வியாபாரிகளை நிறுத்து, உள்ளூர் வர்த்தகம் – உள்ளூர் வளர்ச்சி, தரமற்ற பொருட்களை வியாபாரம் செய்ய அனுமதிக்காதே ஆகிய கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்..

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சிலர் மாநகரசபை முதல்வரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் வர்த்தக சங்க பிரதிநிதி புர்ஹான் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது தற்காலிக வியாபாரிகளிடம் மாநகரசபையினால் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு முறையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதால், உடனடியாக அவற்றை இரத்து செய்ய முடியாதுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

எனினும், வருங்காலங்களில் உள்ளூர் வர்த்தகர்களைப் பாதிக்காத வகையில் அனுமதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், மாநகரசபையின் வருமானம் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் தொடர்பில் உள்ள நெருக்கடிகள் குறித்தும் முதல்வர் இதன்போது தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
அவுஸ்திரேலியாவில் சமூக ஊடகத் தடை; 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கம்

அவுஸ்திரேலியாவில் சமூக ஊடகத் தடை; 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு