முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவொன்று இன்று (12) காலை இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பில் கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வீதியை மறிக்காத வகையிலும், உயர்தரப் பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாதெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








