Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலை–கந்தளாய் பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல்; மின் வேலி அமைக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை–கந்தளாய் பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல்; மின் வேலி அமைக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

8 months ago
in செய்திகள்

திருகோணமலை – கந்தளாய் பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் கிராமத்தை சுற்றி மின் வேலி அமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது, கந்தளாய் 93ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த மக்களால் இன்று (13) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள 93ஆம் கட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

காட்டு யானைகள் தொடர்ந்து கிராமத்திற்குள் புகுந்து நெல் வயல்கள் மற்றும் தென்னை, வாழை போன்றவை அழித்து வருவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், இரவு நேரங்களில் யானைகள் வீடுகளுக்கு அருகில் வருவதால், உயிருக்குப் பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் வாழும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மின்சார வேலி கிராமத்திற்கு மிக அருகில் வரை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், 93ஆம் கட்டை கிராமத்தை உள்ளடக்கியதாக அது அமைக்கப்படவில்லை. இதனால் யானைகள் எளிதாகக் கிராமத்திற்குள் நுழைந்து விடுகின்றன.

காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து கிராமத்தைப் பாதுகாக்க நிரந்தரத் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். தற்போதுள்ள மின் வேலியை நீடித்து, 93ஆம் கட்டை கிராமத்தையும் முழுமையாக உள்ளடக்கும் வகையில் மின் வேலி அமைக்கப்பட வேண்டும். தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிடப்போவதில்லை என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது

வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு