அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 1800 பாடசாலை மாணவர்களுக்கு 7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பாடசாலைப் பொருட்களை விநியோகித்துள்ளதாக ஊவா மாகாண சபை தெரிவித்துள்ளது.
அண்மையில் நாட்டில் இடம் பெற்ற “டிட்வா” வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு, பாடசாலைப் பொருட்கள் இல்லாத 1800 மாணவர்களுக்கு 7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பாடசாலை உபகரணங்களை அண்மையில் வழங்கி வைத்துள்ளார்.
அட்லஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் பதுளை சிறிமல்கொட மற்றும் புஸ்ஸல்லாவ கல்லூரிகளில் கல்வி கற்ரும் மாணவர்களுக்கே இப் பாடசாலைப் பொருட்களை விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








