Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருக்கள்மடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை நிறுத்த தலைக்கவசத்தால் தாக்கிய பொலிஸ்

குருக்கள்மடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை நிறுத்த தலைக்கவசத்தால் தாக்கிய பொலிஸ்

8 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.

நேற்று (14) இரவு 10 மணியளவில் குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில் சென்ற இளைஞர்கள் மீது போக்குவரத்து பொலிஸார் தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகின்றது.

பிரதான வீதியில் வீதிச்சோதனை நடாத்திய நிலையில் உள்வீதியில் நின்ற போக்குவரத்து பொலிஸாரே இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து பொலிஸார் ரோச் லைட் அடித்து குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தமுற்பட்டபோது அதனை மீறிச்சென்றவர்களை நிறுத்த முற்பட்டபோது இந்த நிலைமை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள போதிலும் அவர்களை தலைக்கவசத்தினால் தாக்கி இருவரும் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த பின்னரும் போக்குவரத்து பொலிஸார் தாக்கியுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் செட்டிபாளையம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு உடனடியாக காரிலும், பொலிஸ் வாகனத்திலும் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த இளைஞர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களை நிறுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளபோதும் கெல்மட்டினால் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் அவர்கள் விழுந்த நிலையிலும் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் இது பொலிஸாரின் அராஜகமான செயற்பாடுகள் எனவும் இதன்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் கொண்டுசெல்லப்பட்டதுடன் தாக்குதல் தொடர்பில் இளைஞர்களினால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாள் பூஜைகள்

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாள் பூஜைகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு