இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து கற்பிட்டி குடாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 617 கிலோகிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பீடி இலைகள் கெப் வாகனமென்றில் கொண்டு செல்லும்போது கடந்த 14ஆம் திகதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையின்போது மீட்கப்பட்ட கெப் வாகனம் மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.








