Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச கதிரியல் தொழில்நுட்ப சங்கத்தின் அறிவிப்பு!; நாடளாவிய ரீதியில் முடங்கப்போகும் வைத்தியசாலைகள்?

அரச கதிரியல் தொழில்நுட்ப சங்கத்தின் அறிவிப்பு!; நாடளாவிய ரீதியில் முடங்கப்போகும் வைத்தியசாலைகள்?

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மாலிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் முறையற்ற நடத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஜனவரி 21ஆம் திகதி காலை 8.00 மணி முதல் 22ஆம் திகதி காலை 8.00 மணி வரை நாடு தழுவிய ரீதியில் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மாலிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிராக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவரை தற்காலிகமாக பதவி நீக்க செய்ய வேண்டும் எனவும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு பலமுறை எழுத்துப்பூர்வமாக அறிவித்தும் உரிய தீர்வு கிடைக்காத நிலையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 140 வைத்தியசாலைகளில் பணிப்புரியும் கதிரியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் 21 ஆம் திகதி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளனர். இதனால் அன்றையதினம் கதிரியல் சிகிச்சை சேவைகள் முற்றிலும் ஸ்தம்பிக்க உள்ளது. சிரி ஸ்கேன்,எம்.ஆர்.ஐ ஸ்கேன், எக்ஸ்ரே , மெமோகிராம் மற்றும் அறுவை சிகிச்சைகள் கூட இதனால் முடங்கக் கூடும்.

எவ்வாறாயினும் நோயாளர்களைக் கருத்தில் கொண்டு புற்றுநோய் வைத்தியசாலை, சிறுவர் வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் சிறுநீரக வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியாவசிய சிகிச்சை பிரிவுகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அந்தமான் கடற்பரப்பில் உருவான குறைந்த அழுத்தப் பகுதி; இலங்கையில் மழை தொடரும்!
செய்திகள்

அந்தமான் கடற்பரப்பில் உருவான குறைந்த அழுத்தப் பகுதி; இலங்கையில் மழை தொடரும்!

September 21, 2026
மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
Next Post
இன்று முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்த கிழக்கு அரச வைத்தியர்கள்

இன்று முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்த கிழக்கு அரச வைத்தியர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு