Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போலி முகநூல் கணக்கின் பின்னால் போதை வியாபாரம்; கண்டியில் யுவதி கைது

போலி முகநூல் கணக்கின் பின்னால் போதை வியாபாரம்; கண்டியில் யுவதி கைது

8 months ago
in மட்டு செய்திகள்

கண்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் யுவதி ஒருவரை, கண்டி பொலிஸின் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட யுவதி போலிப் பெயரில் முகநூல் கணக்கொன்றை நடத்தி வந்துள்ளார்.

அதில் போதைப்பொருள் பயன்பாட்டையும், வியாபாரத்தையும் மிகக் கடுமையாக விமர்சித்து பதிவுகளை இட்டு வந்துள்ளார்.

அதேநேரம், போதைப்பொருள் வியாபாரிகள் குறித்த தகவல்களைத் தருவதாகக் கூறி பொலிஸாரின் நம்பிக்கையை வென்று, அந்த மறைவிலேயே தனது போதைப்பொருள் வியாபாரத்தைச் சூட்சுமமாக முன்னெடுத்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டி நகரில் உள்ள விடுதி ஒன்றினைச் சோதனையிட்ட போதே குறித்த யுவதியுடன் தொடர்புடைய மேலும் ஒரு தம்பதியினரும் 2 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த யுவதி நடத்தி வந்த போலி முகநூல் கணக்கில், பல காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகள் நண்பர்களாக இருந்துள்ளனர்.

அத்துடன், உடற்பிடிப்பு நிலையம் ஒன்றை நடத்தி வரும் இவர், ரத்மலானை பகுதியைச் சேர்ந்த ‘சைமா’ என்பவருடைய போதைப்பொருள் வலையமைப்பின் கண்டி முகவராகச் செயற்பட்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!
செய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!

September 22, 2026
மட்டக்களப்பில் மீன் வாங்கச் சென்றவர் மீது தாக்குதல்; சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை கோரிக்கை!
செய்திகள்

மட்டக்களப்பில் மீன் வாங்கச் சென்றவர் மீது தாக்குதல்; சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை கோரிக்கை!

September 22, 2026
மட்டு வாகனேரியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; யானை வேலி அமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

மட்டு வாகனேரியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; யானை வேலி அமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

September 22, 2026
பட்டிருப்பு ரோட்டரி கழகத்தின் இரண்டாவது பதவியேற்பு விழா; மாணவர்களுக்காக மூன்று புதிய சமூகநலத் திட்டங்கள்!
மட்டு செய்திகள்

பட்டிருப்பு ரோட்டரி கழகத்தின் இரண்டாவது பதவியேற்பு விழா; மாணவர்களுக்காக மூன்று புதிய சமூகநலத் திட்டங்கள்!

September 22, 2026
அநுர ஆட்சியில் “நீதிபதிகள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள்” – கைதுகள் அரசியல் பழிவாங்கலல்ல; எம்.பி கந்தசாமி பிரபு!
அரசியல்

அநுர ஆட்சியில் “நீதிபதிகள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள்” – கைதுகள் அரசியல் பழிவாங்கலல்ல; எம்.பி கந்தசாமி பிரபு!

September 22, 2026
மட்டக்களப்பு வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலய மாணவிகள் தேசிய மட்ட கைப்பந்து போட்டியில் மூன்றாமிடம்
செய்திகள்

மட்டக்களப்பு வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலய மாணவிகள் தேசிய மட்ட கைப்பந்து போட்டியில் மூன்றாமிடம்

September 22, 2026
Next Post
முறைகேடான சொத்து சேர்ப்பு: 65 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முறைகேடான சொத்து சேர்ப்பு: 65 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு