Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்ற மாணவியை 26 நாட்களாக காணவில்லை!

அரசடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்ற மாணவியை 26 நாட்களாக காணவில்லை!

15 minutes ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

எனது மகள் கடத்தப்பட்டோ அல்லது வலுக்கட்டாயமாக எங்காவது யாராலும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கவேண்டும்.பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டு முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லையென கடந்த 26 நாட்களாக காணாமல்போன தனது மகளைத்தேடிவரும் முன்னாள் போராளியான தெய்வேந்திரா தேவகுமாரன் தெரிவித்தார்.

நேற்று மாலை மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தகப்பன் மற்றும் தாய் இருவரும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி காலை சுமார் 9 மணியளவில், அரசடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு தனது மகளைக் கொண்டு சேர்த்துவிட்டுச் சென்றதாகவும், பிற்பகல் 1 மணிக்கு வகுப்பு முடிந்த பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அன்றைய தினம் பிற்பகல் 4 மணியளவில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார். அதன்படி, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகவும், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சி.சி.டி.வி காணொளிகளைப் பரிசீலித்ததாகவும் கூறினார்.

எனினும், குறிப்பிட்ட வீதியைத் தாண்டிச் செல்வது வரை மட்டுமே கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளதாகவும், அதற்குப் பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் தெரியவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியதாகவும், அங்கிருந்து பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டார். ஆனாலும், விசாரணையில் எதிர்பார்த்த வேகம் காணப்படாததாலேயே ஊடகங்கள் வாயிலாக இவ்விடயத்தை வெளிப்படுத்த முன்வந்ததாக அவர் தெரிவித்தார்.

தனது மகள் உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் சிறந்த பெறுபேறுகளை எதிர்பார்த்திருந்ததோடு, ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா கற்கைகளுக்காகவே சுயவிருப்பத்தின் பேரில் அக்கல்லூரியில் இணைக்கப்பட்டார் என்றும் கூறினார். அவர் எவ்விதத் தவறான பழக்கவழக்கங்களோ, அச்சமோ இன்றித் துணிச்சலாகப் பழகக்கூடியவர் எனவும், தமது மகள் வற்புறுத்தலின் பேரில் எங்காவது கடத்தி வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மற்றைய பகுதிகளிலும் இளம்பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் பதிவாகி வருவதால் குடும்பத்தினர் பெரும் அச்சத்தில் உள்ளதாகவும், எனவே பொலிஸார் இவ்விவகாரத்தைத் தீவிரமாக ஆராய்ந்து தனது மகளை மீட்டுத் தருமாறும் ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் அவர் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் சிரமதானம்!
செய்திகள்

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் சிரமதானம்!

November 22, 2026
மயிலவட்டவானில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் மடக்கிப் பிடிப்பு!
செய்திகள்

மயிலவட்டவானில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் மடக்கிப் பிடிப்பு!

November 22, 2026
உடன் அமுலுக்கு வரும் வகையில் 6 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்
செய்திகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் 6 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்

November 22, 2026
பேத்தாழை பாரதியார் முன்பள்ளி சிறார்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிய பாலீஸ்வரர் ஆலயம்!
செய்திகள்

பேத்தாழை பாரதியார் முன்பள்ளி சிறார்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிய பாலீஸ்வரர் ஆலயம்!

November 21, 2026
மாவீரர் நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு; உணர்வுபூர்வமாக நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு
செய்திகள்

மாவீரர் நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு; உணர்வுபூர்வமாக நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு

November 21, 2026
இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
செய்திகள்

இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

November 21, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.