மட்டக்களப்பு மயிலவட்டவான் – வீரக்கட்டு பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வந்த டிப்பர் வாகனமொன்று, நேற்று (21.11.2026) காலை வந்தாறுமூலை உப்போடை பகுதியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெற்று வருவதை அவதானித்த கிராம உத்தியோகத்தர் மற்றும் விவசாயிகள் இணைந்து குறித்த டிப்பர் வாகனத்தை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









