Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி உட்பட 12 பொலிஸ் நிலையங்கள் புனரமைப்பு; பொலிஸ் மா அதிபர் திறந்து வைப்பு!

காத்தான்குடி உட்பட 12 பொலிஸ் நிலையங்கள் புனரமைப்பு; பொலிஸ் மா அதிபர் திறந்து வைப்பு!

15 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்க்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலையம் உட்பட 12 பொலிஸ் நிலையங்களின் புனரமைக்கப்பட்ட கட்டிடங்களை வைபவரீதியாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்று சனிக்கிழமை (21) திறந்து வைத்தார்.

பாசிக்குடா, வாழைச்சேனை, மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, ஆயித்தியமலை, மங்களகம, வவுணதீவு, கொக்குவில், உட்பட 11 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு தங்குமிட விடுதி மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய கட்டிட தொகுதி, தங்குமிட விடுதி உட்பட்ட கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டு வைபவ ரீதியாக பொலிஸ் மா அதிபரால் திறந்துவைக்கும் பிரதான நிகழ்வு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

இதன் போது காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன், அதனைப் பொலிஸ் மா அதிபர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ தங்குமிட கட்டிடம் மற்றும் பொலிஸ் நிலைய கட்டிடம் ஆகியவற்றை சமயப் பிரமுகர்களின் ஆசியுடன் பொலிஸ் மா அதிபர் திறந்து வைத்த பின்னர் பொலிஸ் நிலைய வளாகத்தையும் அவர் பார்வையிட்டார்.

இதன்போது, காத்தான்குடி வர்த்தக சமூகத்தின் சார்பில் பொலிஸ் மா அதிபருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, பித்தளையினால் செய்யப்பட்ட வாள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அத்துடன், கலந்து கொண்ட பொலிஸ் உயரதிகாரிகளுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பத் குமார் லியனகே, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜருஸ் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மட்டக்களப்பு மாநகர சபை மேயர், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர், ஆரையம்பதி பிரதேச சபைத் தவிசாளர், தமிழ், முஸ்லிம் சமய மற்றும் சமூகப் பிரமுகர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் ஊடாகப் பதிவு செய்யப்பட்ட 90க்கும் மேற்பட்ட தனிநபர் வியாபாரப் பதிவு ஆவணங்கள் இணையத்தில் கசிவு!
செய்திகள்

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் ஊடாகப் பதிவு செய்யப்பட்ட 90க்கும் மேற்பட்ட தனிநபர் வியாபாரப் பதிவு ஆவணங்கள் இணையத்தில் கசிவு!

November 22, 2026
மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்
செய்திகள்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

November 22, 2026
தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை அரசு மீறியுள்ளது; நாடாளுமன்றத்தைக் கலைக்க முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை!
அரசியல்

தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை அரசு மீறியுள்ளது; நாடாளுமன்றத்தைக் கலைக்க முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை!

November 22, 2026
ருமேனியாவில் மண் மேடு சரிந்து விபத்து: இலங்கையர் ஒருவர் பலி; மற்றொருவர் உயிருடன் மீட்பு!
உலக செய்திகள்

ருமேனியாவில் மண் மேடு சரிந்து விபத்து: இலங்கையர் ஒருவர் பலி; மற்றொருவர் உயிருடன் மீட்பு!

November 22, 2026
அரசடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்ற மாணவியை 26 நாட்களாக காணவில்லை!
காணொளிகள்

அரசடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்ற மாணவியை 26 நாட்களாக காணவில்லை!

November 22, 2026
மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் சிரமதானம்!
செய்திகள்

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் சிரமதானம்!

November 22, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு