Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவின் அடுத்த அறிவிப்பு; உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுகிறது!

அமெரிக்காவின் அடுத்த அறிவிப்பு; உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுகிறது!

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பான உலக சுகாதார நிறுவனத்திலிருந்து இன்று (22) உத்தியோகபூர்வமாக விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, அமெரிக்கா மற்றும் உலகளாவிய சுகாதாரத்துக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2025 ஆம் ஆண்டு பதவியேற்ற முதல் நாளிலேயே நிர்வாக உத்தரவு மூலம் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அமெரிக்க சட்டப்படி, விலகுவதற்கு முன் ஒரு ஆண்டு முன் அறிவிப்பு வழங்கி, நிலுவையில் உள்ள 260 மில்லியன் டொலர் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

எனினும், அந்தத் தொகை இன்னும் செலுத்தப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை, உலக சுகாதார அமைப்பின் செயற்பாடுகள் அமெரிக்காவுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்தநிலையில், அமெரிக்காவின் இந்த முடிவை “மிகப்பெரிய இழப்பு” என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், அமெரிக்கா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா அந்த அமைப்பிற்கு வழங்கி வந்த 18 சதவீத நிதிப்பங்களிப்பு நிறுத்தப்பட்டதால், தற்போது அந்த நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

நிவாரணப் பணிகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள உலக சுகாதார அமைப்பு, தனது நிர்வாகக் குழுவை பாதியாகக் குறைத்துள்ளதுடன், இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் கால்வாசிப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளது.

இது உலகளாவிய நோய் தடுப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவின் இந்த வெளியேற்றம் ஒருபுறம் இருக்க, வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உலக சுகாதார அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில், அமெரிக்கா செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை எவ்வாறு வசூலிப்பது மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து உறுப்பு நாடுகள் விவாதிக்கவுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காதலனுக்காக தாயின் தாலிக்கொடியைத் திருடிய மகள் கைது; மட்டக்களப்பில் சம்பவம்!
செய்திகள்

காதலனுக்காக தாயின் தாலிக்கொடியைத் திருடிய மகள் கைது; மட்டக்களப்பில் சம்பவம்!

November 23, 2026
ரூ. 5 இலட்சத்துக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்தால் அதிக வரி செலுத்த நேரிடலாம்; உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

ரூ. 5 இலட்சத்துக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்தால் அதிக வரி செலுத்த நேரிடலாம்; உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!

November 23, 2026
டித்வாவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்!
செய்திகள்

டித்வாவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்!

November 23, 2026
பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதியை உறுதிப்படுத்த தேசிய வேலைத்திட்டம்; இலங்கையில் புதிய முன்னெடுப்பு!
செய்திகள்

பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதியை உறுதிப்படுத்த தேசிய வேலைத்திட்டம்; இலங்கையில் புதிய முன்னெடுப்பு!

November 23, 2026
ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல; கல்விப் பிரதியமைச்சர்!
செய்திகள்

ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல; கல்விப் பிரதியமைச்சர்!

November 23, 2026
ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!
செய்திகள்

ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

November 23, 2026
Next Post
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு