சஜித் பிரேமதாசாவின் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நடத்தும் 48 மணி நாடளாவிய வேலைநிறுத்தத்திற்கு அதர்வளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
GMOA, அரசு மருத்துவ சேவைகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சகம் உடன்படிக்கையை அமல்படுத்தவில்லை என்ற காரணத்தால் இந்த வேலைநிறுத்தத்தை தொடங்கியது.
SJB உறுப்பினரான டாக்டர் சமல் சஞ்சீவ, மருத்துவர்களை வேலைநிறுத்தத்தை ஆதரிக்குமாறு தெரிவித்துள்ளார்.
அதேசமயம் முக்கிய மருத்துவ சேவைகள் தொடரும், கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள், சிறுநீரக மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படாது.
அத்த்தோடு பொதுமக்களுக்கு எந்த தடையும் ஏற்படாது என GMOA உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








