Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் 30வது ஆண்டு நிறைவை ஒட்டி பல்வேறு நிகழ்வுகள்

மட்டு வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் 30வது ஆண்டு நிறைவை ஒட்டி பல்வேறு நிகழ்வுகள்

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 30வருடமாக சிறுவர் மற்றும் வளர்ந்தவர்களின் உளமேம்பாடு மற்றும் இனநல்லுறவு,சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புமிக்க சேவையினை வழங்கிவரும் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் 30வது ஆண்டு நிறைவினைக்குறிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் அதற்கு பின்னரான காலம் என தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தினை தலைமையகமாக கொண்டு வடகிழக்கு உட்பட முழு நாட்டிற்குமான சேவையாக இதனை முன்னெடுத்துவருகின்றது.

இதன் 30வது ஆண்டினை நிறைவுசெய்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் கடந்த (20) மட்டக்களப்பு பயனியர் வீதியில் உள்ள வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பும் 30வது ஆண்டினை குறிக்கும் வகையிலான நினைவுப்பலகை திரைநீக்க நிகழ்வும் நடைபெற்றது.

வண்ணத்துப்பூச்சின் சமாதான பூங்காவின் ஸ்தாபகரும் அதன் இயக்குனருமான அருட்தந்தை போல்சற்குணநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் இயக்கனர் சபை உறுப்பினர்கள், வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

யுத்த காலத்தில் யுத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான உளவியல் ரீதியான தேவைகளை கருத்தில்கொண்டு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பின்னர் யுத்ததினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் வளர்ந்தவர்கள் என அனைவருக்குமான உளவியல்மேம்பாடுகளை வழங்கிவருகின்றது.

அதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட சுனாமி மற்றும் இயற்கை பேரிடர்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏனைய காரணிகளினால் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினரின் உளவில் மேம்பாட்டிற்காகவும் பல்வேறு பணிகளை முன்னெடுத்துவருகின்றது.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் இனங்களிடையே நல்லுறவினை ஏற்படுத்தும் செயற்பாடுகளிலும் வண்ணத்துப்பூச்சு சமாதான பூங்கா கடந்தகாலத்தில் பல்வேறு சேவைகளை முன்னெடுத்துவந்திருக்கின்றது.
இந்த நிகழ்வில் 30வருட நிறைவினைக்குறிக்கும் நினைவுப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன் ஊடகவியலாளர்களுக்கும் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் இயக்குனர்சபை மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

1996ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மன இறுக்கத்தினை போக்குவதற்கும் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கும் வளர்ந்தவர்களின் மனக்காயங்களை தீர்ப்பதற்குமான இடத்தினை அமைக்கவேண்டும் என்ற இயேசுசபை துறவி அருட்தந்தை போல் சற்குநாயகம் அடிகளாரின் முயற்சிக்கு கனடாவினை சேர்ந்த உளவியலாளர் போல் ஹோகன் அனுசரணை மற்றும் ஆலோசனையின் கீழ் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்கா உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அனைவரும் இணைந்து அனைத்து சமூதாயமாக ஒத்துழைப்பு வழங்கி வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவினை முன்கொண்டுசெல்லவேண்டும் என அதன் ஸ்தாபகர் அருட்தந்தை போல்சற்குணநாயகம் அடிகளார் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!
மட்டு செய்திகள்

டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்;     வெள்ள எச்சரிக்கை!
செய்திகள்

களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்; வெள்ள எச்சரிக்கை!

August 3, 2026
சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!

August 3, 2026
Next Post
ஜனவரி 25 நாட்களில் 1,375 வீதி விபத்துக்கள் -155 பேர் உயிரிழப்பு; பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர்

ஜனவரி 25 நாட்களில் 1,375 வீதி விபத்துக்கள் -155 பேர் உயிரிழப்பு; பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.