Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் 100% வரி விதிப்பேன்; ட்ரம்ப் மிரட்டல்

கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் 100% வரி விதிப்பேன்; ட்ரம்ப் மிரட்டல்

8 months ago
in உலக செய்திகள், செய்திகள்

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனேடியப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் மீது உடனடியாக 100% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் எந்த ஒப்பந்தம் என்பது குறித்து அவர் எவ்வித தகவல்களையும் வௌிப்படுத்தவில்லை.

கடந்த வாரம், கனடா பிரதமர் கார்னி சீனாவுடன் ஒரு “மூலோபாய கூட்டாண்மையை அறிவித்ததோடு, வர்த்தக வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டார்.

அந்த நேரத்தில், ட்ரம்ப் இந்த நடவடிக்கையை “ஒரு நல்ல விஷயம்” என்று அழைத்தார்.

ஆனால், சமீப நாட்களாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ஆற்றிய உரையில், அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கு சிதைந்துவிட்டதாக பிரதமர் கார்னி கூறியதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

அத்துடன் பெரிய வல்லரசுகளின்” பொருளாதாரக் கட்டுப்படுத்தலுக்கு எதிராக மற்றைய நடுத்தர நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் கார்னி வலியுறுத்தினார்.

அவர் ட்ரம்ப்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இது அமெரிக்காவை நோக்கியே கருதப்பட்டது.

இதற்கு அடுத்த நாள் தனது உரையில் பதிலளித்த ட்ரம்ப், அமெரிக்காவால் தான் கனடா பிழைத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

மேலும், தனது புதிய ‘அமைதி ஒப்பந்தத்தில் சேர கனடாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் அமெரிக்க ஜனாதிபதி திரும்பப் பெற்றார்.

சீனப் பொருட்களை அமெரிக்காவிற்குள் அனுப்புவதற்கான ஒரு இறங்குத் துறையாக கனடாவை மாற்ற முடியும் என்று கார்னி நினைத்தால், அது முற்றிலும் தவறான விடயமாகும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

September 19, 2026
ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை சட்டத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை சட்டத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்!

September 19, 2026
அனோஜனின் மரண தண்டனை விவகாரம் ; சவூதி உயரதிகாரிகளுக்கு அமைச்சரிடமிருந்து சென்ற முக்கிய கோரிக்கை!
செய்திகள்

அனோஜனின் மரண தண்டனை விவகாரம் ; சவூதி உயரதிகாரிகளுக்கு அமைச்சரிடமிருந்து சென்ற முக்கிய கோரிக்கை!

September 19, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்

September 19, 2026
டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!
செய்திகள்

டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

September 19, 2026
ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
Next Post
போதைப்பொருட்களை கடத்தி வந்த இழுவை படகுகளுடன் 11 பேர் கைது

போதைப்பொருட்களை கடத்தி வந்த இழுவை படகுகளுடன் 11 பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு