Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை தமிழர்களுக்கு உண்டு; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை தமிழர்களுக்கு உண்டு; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிடைக்கப்பெற்றுள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மூன்றாண்டுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை தமிழர்களுக்கு உண்டு என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலக நடவடிக்கை மற்றும் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் தொடர்பில் அலுவலகத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்கு பிரதான காரணம் அப்போதைய அரசியல் சூழலே தவிர அலுவலகத்தின் குறைப்பாடல்ல.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்காக முதற்கட்டமாக 65 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் விசாரணை அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக 375 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு இதுவரையில் சுமார் 11 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் 5,000 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை இந்தாண்டு நிறைவுப்படுத்தவும், ஏனைய முறைப்பாடுகளை எதிர்வரும் இரண்டாண்டுகளில் நிறைவு செய்யவும் எதிர்பார்த்துள்ளோம்.

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும். அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

மனித புதைகுழிகள் அகழ்வு குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அகழ்வு பணிகளுக்கு தேவையான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கம் வெளிப்படையாக செயற்படுகிறது. சர்வதேச மட்டத்திலும் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை தமிழர்களுக்கு உண்டு.

காணாமல்போனோர் விவகாரம், மனித புதைகுழி விவகாரத்தில் வெளிப்படையாகவே செயற்படுகிறோம். இவ்விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் எமக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் காணப்படும் தொழில்நுட்ப மற்றும் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது என்றார்.என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!

September 20, 2026
‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
Next Post
18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள்; பாம்பனில் சாலை மறியல் போராட்டம்

18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள்; பாம்பனில் சாலை மறியல் போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.