Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள்; பாம்பனில் சாலை மறியல் போராட்டம்

18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள்; பாம்பனில் சாலை மறியல் போராட்டம்

8 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்யக்கோரி மீனவர்களின் உறவினர்கள் பாம்பன் பேருந்து நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாம்பன் தெற்குவாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த ஆகஸ்ட் மாதம் 5ந் திகதி எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களுக்கு இந்திய தொகையில் ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் அபராத தொகையும், கட்ட தவறும் பட்சத்தில் 18 மாத சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் மீனவர்கள் பத்து பேரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களை கடந்து சிறையில் இருப்பதால் மீனவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினர் பாம்பன் பேருந்து நிலையம் முன்பு மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ராமேஸ்வரம் வரும் வாகனம் மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் சாலையின் அணிவகுத்து நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாம்பன் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கொழும்பில் உள்ள இலங்கை மேல் நீதிமன்றத்தில் மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக இந்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என கூறியதால் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களின் குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!

September 20, 2026
‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
Next Post
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சர்வதேச நிதி நிறுவன முதலீட்டு திட்டம்

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சர்வதேச நிதி நிறுவன முதலீட்டு திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு