Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“கனடா பொருட்களையே வாங்குவோம், கனடாவை கட்டமைப்போம்”; மார்க் கார்னி திட்டவட்டம்

“கனடா பொருட்களையே வாங்குவோம், கனடாவை கட்டமைப்போம்”; மார்க் கார்னி திட்டவட்டம்

9 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கனடாவை தனது நாட்டுடன் இணைக்க தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறார். இதற்கு கனடா நாட்டு பிரதமர் மார்க் கார்னி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனிடையே சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் டிரம்ப், மார்க் கார்னி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது டிரம்ப் அறிவித்த அமைதி வாரியத்தில் இணைய கார்னிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும் அமெரிக்காவுடனான உறவை புதுப்பித்து கொள்ளவும் கார்னி ஒரு வாய்ப்பாக இதனை கருதினார். இருப்பினும் டிரம்ப் அவருடைய கோரிக்கையை நிராகரித்தார். மேலும் டிரம்ப் இது “பெரிய தலைவர்களுக்கான உருவாக்கப்பட்ட மிக உயரிய குழு, இதில் கனடாவுக்கு இடமில்லை” என்று பகிரங்கமாக அறிவித்தார். மேலும் அவர் பொதுமேடையில் “கனடா அமெரிக்காவால்தான் உயிர் வாழ்கிறது” என்றார். இதனால் சுவிட்சர்லாந்தில் இருந்து பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

பின்னர் கியூபெக் திரும்பிய அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளர். அதில் அவர் “கனடா அமெரிக்காவால் உயிர் வாழ்வதில்லை. நாங்கள் கனடியர்கள் என்பதால்தான் கனடா செழிக்கிறது.” என்றார். பின்னர் அமெரிக்கா-கனடா இடையிலான நீண்டகால உறவைப் பாராட்டிய கார்னி, அதே நேரத்தில், எங்கள் வீட்டின் உரிமையாளர்கள் நாங்களே. இது எங்கள் நாடு; எங்கள் எதிர்காலம்; முடிவு எங்களிடமே உள்ளது. மேலும், நடுத்தர சக்தி நாடுகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், பெரும் சக்திகள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதமாகவும், சுங்க வரிகளை அழுத்தம் செலுத்தும் கருவியாகவும், நிதி கட்டமைப்புகளை கட்டாயப்படுத்தும் சாதனமாகவும், விநியோகச் சங்கிலிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பலவீனங்களாகவும் மாற்றத் தொடங்கி உள்ளன, என்று குற்றம் சாட்டினார்.

This is our country, and we decide what happens next. pic.twitter.com/Z9yLhaigPF

— Mark Carney (@MarkJCarney) November 1, 2025

இதற்கு டிரம்ப் கடும் பதிலடி கொடுத்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “என்ன நினைத்துக்கொண்டுள்ளார் என தெரியவில்லை. எங்கள் தயவு இல்லாமல் சீனாவை சார்ந்து இருக்க விரும்புகிறாரா கவர்னர் கார்னி. சீனப்பொருட்களை கனடாவில் இறக்குமதி செய்தால் அவர்கள் போகிற போக்கில் உங்களை விழுங்கிவிடுவார்கள். அதனை மீறி நீங்கள் சீனா உடன் உறவு வைத்துக்கொள்ள விருப்பப்பட்டால் உங்கள் மீது 100 சதவீதம் வரிவிதிக்கப்படும்” என்றார். முன்னதாக அமெரிக்காவின் அடுத்தக்கட்ட பாதுகாப்பு அம்சமான தங்க கவசத்தில் இணைய கனடா மறுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில் டிரம்ப் மிரட்டலுக்கு பதிலடியாக ‘சுயசார்பு கனடாவை உருவாக்குவோம்’ என நாட்டு மக்களுக்கு கனடா பிரதமர் வீடியோ வெளியிட்டு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோவில் அவர் கூறுகையில், “வெளிநாட்டு அச்சுறுத்தலை சமாளிக்க ‘கனடா பொருட்களையே வாங்குவோம், கனடாவை கட்டமைப்போம்’. மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, எனவே நம்மால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம்” என்று மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!

November 4, 2026
அமெரிக்க தேர்தலில் வெற்றி; நியூயோர்க் மாநில சட்டமன்றத்துக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனிய அமெரிக்கப் பெண்ணாக அபிர் கவாஸ்!
அரசியல்

அமெரிக்க தேர்தலில் வெற்றி; நியூயோர்க் மாநில சட்டமன்றத்துக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனிய அமெரிக்கப் பெண்ணாக அபிர் கவாஸ்!

November 4, 2026
மண் சரிவு காரணமாகத் தடைப்பட்ட மலையக புகையிரதப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியது!
செய்திகள்

மண் சரிவு காரணமாகத் தடைப்பட்ட மலையக புகையிரதப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியது!

November 4, 2026
பாடசாலைப் பையில் மறைத்து சட்டவிரோத மதுபானம் கடத்தல்; அனலைதீவில் ஒருவர் கைது!
செய்திகள்

பாடசாலைப் பையில் மறைத்து சட்டவிரோத மதுபானம் கடத்தல்; அனலைதீவில் ஒருவர் கைது!

November 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

November 4, 2026
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

November 4, 2026
Next Post
நாளை முதல் தொடர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள அரச வைத்தியர்கள்

நாளை முதல் தொடர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள அரச வைத்தியர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.