Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு ஆலயத்தில் தடை; பங்குத்தந்தை அதிரடி

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு ஆலயத்தில் தடை; பங்குத்தந்தை அதிரடி

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பங்கில் யாராவது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஆலய செயற்பாடுகளிலிருந்து நீக்கப்படுவார்களென கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தை மாதம் 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இடம்பெற்ற ஞாயிறு திருப்பலி நிறைவில் மேற்கண்டவாறு தெரிவித்த அருட்தந்தை வசந்தன் அவர்கள் எமது தமிழ் இனம் திட்டமிட்டு போதைப்பொருளால் அழிக்கப்படுகின்றதெனவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் எமது இனத்தை மீட்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோமெனவும் எடுத்துரைத்தார்.

தற்போது வட கிழக்கில் குறிப்பாக வடமராட்சி கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும்நிலையில் வடமராட்சி கிழக்கு கடலில் அதிகளவான போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் பதிவாகி வருகின்றதெனவும் இதனால் சிறுவர் தொடக்கம் பெரியவர் வரை பாதிக்கப்படுகின்றார்களெனவும் குறிப்பிட்ட அருட்தந்தை போதைப்பொருளை கடத்தி குடும்பங்களை சீரழிக்கும் இந்த கொடூரமான செயற்பாடுகளில் இருந்து விடுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை போன்ற குற்றச்செயல்கள் நிரூபிக்கப்பட்டு ஆலய செயற்பாடுகளிலிருந்து நீக்கப்படுபவர்கள் தமது குற்றங்களுக்காக மனம்வருந்தி திருயாத்திரை மேற்கொண்டு பாவசங்கீர்த்தன அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் ஆலய செயற்பாடுகளில் இணைத்துக்கௌ;ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
Next Post
பறிக்கப்படப்போகும் சிறீதரனின் பாராளுமன்றக் குழுத்தலைவர் பதவி; சி.வி.கேவின் முடிவுக்கு காத்திருக்கும் சுமந்திரன்!

பறிக்கப்படப்போகும் சிறீதரனின் பாராளுமன்றக் குழுத்தலைவர் பதவி; சி.வி.கேவின் முடிவுக்கு காத்திருக்கும் சுமந்திரன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு