Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பறிக்கப்படப்போகும் சிறீதரனின் பாராளுமன்றக் குழுத்தலைவர் பதவி; சி.வி.கேவின் முடிவுக்கு காத்திருக்கும் சுமந்திரன்!

பறிக்கப்படப்போகும் சிறீதரனின் பாராளுமன்றக் குழுத்தலைவர் பதவி; சி.வி.கேவின் முடிவுக்கு காத்திருக்கும் சுமந்திரன்!

6 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவின் ஆலோசனையினை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினால் அவரின் பாராளுமன்ற குழு தலைவர் பதவியை மீளப்பெற கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று (25) பிற்பகல் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன்,

பாராளுமன்ற குழு தலைவர் பதவியானது தமிழரசுக்கட்சியின் அரசியல்குழவினாலேயே வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்த பின்னர் வவுனியாவில் அரசியல்குழுவின் கூட்டத்தில் அந்தநேரத்தில் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டவர். அந்த நேரத்தில் தேசிய பட்டியல் ஆசனம் சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கும் அந்த அரசியல்குழு கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.

அதேபோன்று பாராளுமன்றத்தில் கொறடா பதவியை டாக்டர் சத்தியலிங்கத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற நடவடிக்கைகுழுவின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனையும் நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்ற குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நாங்கள் நியமித்தோம்.

அரசியல்குழுவினால் நியமிக்கப்பட்ட நியமனங்களை மாற்றுவதற்கான அதிகாரம் அரசியல்குழுவுக்கே இருக்கின்றது. எந்த குழு நியமித்ததோ அதனை மாற்றுவதற்கு அதிகாரம் அந்த குழுவுக்கு உண்டு.

தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவின் ஆலோசனையினை அவர் ஏற்றுக்கொள்ளமறுத்ததன் காரணத்தினால் அரசியல்குழுவினால் வழங்கப்பட்ட நியமனத்தினை மீளப்பெறுவது என தீர்மானிக்கப்பட்டது.

அரசியல்குழு அவர்மீது நம்பிக்கைவைத்து ஏகமனதாக பாராளுமன்ற குழத்தலைவர் பதவியை அவருக்கு வழங்கியது. அரசியல்குழு இரண்டு தடவைகள் அவர் பாராளுமன்ற அரசியல்பேரவையிலிருந்து இராஜினாமா செய்யவேண்டும் என்ற ஆலோசனையினை வழங்கியிருந்தது. நேற்றை தினம் சுமார் 04மணிநேரங்கள் அதே கருத்தினை அவரிடம் வலியுறுத்தியிருந்தோம்.

ஆகவே கட்சியின் எந்த உயர்குழு அவருக்கு அந்த பதவியினை வழங்கியதோ அந்த குழுவின் ஆலோசனையினையும் வற்புறுத்தலையும் அவர் செவிமடுக்கவில்லையென்றால் அந்த பதவியை அவரிடமிருந்து எடுப்பது என தீர்மானித்தோம்.

இதேநேரம் இது தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கேட்டபோது அவ்வாறான எந்த இறுதி முடிவும் அவர் இதுவரையில் எடுக்கவில்லையென தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
Next Post
அபிவிருத்தி பிரதி அமைச்சரின் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்யும் நபர்

அபிவிருத்தி பிரதி அமைச்சரின் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்யும் நபர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு