மட்டக்களப்பு, கோட்டைமுனை – அருள்மிகு அரசடிப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் 2026 புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்ட பக்ஷ மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 01.02.2026, ஞாயிற்றுக்கிழமை காலை 07:45 மணி முதல் 08:57 மணி வரை நடைபெறவுள்ளதுடன் எண்ணைக்காப்பு இம்மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் காலை முதல் மாலை வரை நடைபெறும்.
ஸ்ரீ தெட்சண கைலாயம் எனப் போற்றப்படும் இச்சிவ ஆலயம், தமிழ்ச் சமயமும் கலாச்சாரமும் மலர்ந்த மட்டக்களப்பு மாநகரின் மையத்தில் அமைந்துள்ளது.
பஞ்ச பச்சர சிவதமங்கள் மற்றும் ஆலய அலங்காரத்தின் கீழ் நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள், ஆலய அடியார்கள் கலந்து கொண்டு எம்பெருமானின் போருட்கடாட்சம் பெறுக. என ஆலய நிர்வாக சபை தெரிவித்துள்ளது.









