Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இடைத்தரகர்களால் சூறையாடப்படும் முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நிதி

இடைத்தரகர்களால் சூறையாடப்படும் முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நிதி

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய தலைவர் 2009 க்கு முன் எங்களை தனது பெற்றெடுத்த குழந்தைபோல பார்த்து வளர்த்தார். 2009 பின்னர் உயிரிழை அமைப்பில் உள்ள எங்களை பிரகாசமான எதிர்காலம் யு.கேமற்றும் பிரகாசமான எதிர்காலம் லங்கா போன்ற அமைப்புக்கள் எங்கள் அவையங்களை விற்று பிழைக்கின்றதுடன் புலம் பெயர்தவர்களால் உயிரிழை அமைப்புக்கு வழங்கப்பட்ட 23 கோடி ரூபா பணத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளது என முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்ட உயிரிழை அமைப்பின் உறுப்பினரான சா.குகதாசன் தலைமையிலான பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்

மட்டக்களப்பு வொய் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சா.குகதாசன் தலைமையிலான முள்ளம் தண்டு பாதிக்கப்பட்ட 9 பேர் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தனர்.

முள்ளம்தண்டு பாதிக்கப்பட்டு 2009 யுத்தத்திற்கு பிற்பாடு வடக்கு கிழக்கு என இணைக்கப்பட்ட மாங்குளத்தை மையமாக கொண்டு உயிரிழை அமைப்பு அமைக்கப்பட்டு தலைமைகாரியலத்தில் உறவுகளாக பயணித்துக் கொண்டோம் எங்களுக்கான நிதி வழங்குனர்கள் எங்கள் அமைப்புக்கு வழங்கிவருகின்றனர்

இந்த நிலையில் 2022 க்கு பிற்பட்ட காலம் இந்த அமைப்புக்குள் பிறநிதி அனுசரணையாளர்களாக பிரகாசமான எதிர்காலம் யு.கே மற்றும் பிரகாசமான எதிர்காலம் லங்கா அமைப்புக்கள் வந்து எங்களை வியாபாரத்துக்காக பயன்படுத்தி ஏற்பட்ட நிதி முறைகேடுகளையடுத்து நிர்வாகத்தினரை வெளியேற்றப்பட்டதையடுத்து இரண்டு புதிய நிர்வாகத்தை தெரிவு செய்தோம்.

இவ்வாறான நிலையில் புதிய இந்த இரண்டு நிர்வாகங்களும் ஒன்றுக்கு ஒன்று ஒத்தாசையாக இருக்கின்றது. அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 பேர் அங்கத்தவராக இருந்தோம் இதில் 4 போராளிகள் மருத்துவசிகிச்சை பயனளிக்காது உயிரிழந்துள்ளனர். ஒருவர் மிகவும் சுகயீனம் இன்றியும் 20 பேர் இருக்கன்றோம்.

பாதிக்கப்பட்ட நாங்கள் அழுத்துபுண் அதனுடைய செயற்படுகின்ற தாக்கங்கள் காரணமாக 3 வருடம் கடந்து மரணத்துக்கு இட்டுச் செல்லும் அந்த அழுத்ததினால் ஒரு குறுகிய நேரம் மட்டும் தான் சக்கர நாற்காலியில் அமைந்திருக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த அடிப்படையில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை பிரதேசங்களில் இருந்து உயிரிழை மாங்குளம் பிரதான காரியாலயத்துக்கு இரண்டு நாள் தொடர்ந்து பயணித்து மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றோம்.

இவ்வாறான நிலமையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் தொடக்கம் 31-12-2023 காலப்பகுதியில் ஓராண்டுக்கான கணக்கு அறிக்கையில் வரவாக 8 கோடியே 80 இலச்சத்து 66 ஆயிரத்து 692 ரூபா 90 சதம் என சொல்லப்படுகின்றது இந்த 2002 தொடக்கம் 2005 வரை இறுதி காலம்வரை 23 கோடிக்கு மேற்பட்ட நிதிகள் புலம்பெயர் மக்களால் உயிரிழை அமைப்புக்கு வழங்கப்பட்டது

இருந்தபோதும் எமது அமைப்பில் உள்ள 250 பயனாளிகளில் 56 பேருக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளான உறவுகளை இழந்திருக்கின்றோம் இதில் 196 பேரில் 30 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இலங்கையிலே மாற்றுத்திறனாளிகள் அமைப்பிலே முதலாம் இடத்தை வகித்த அமைப்பு இன்று பூச்சியத்தில் வந்துள்ளது. இதற்கு காரணம் அமைப்பின் நிருவாகத்தில் உள்ள பணிப்பாளர்கள் நிர்வாகம் வவுணியா பிரதேச செயலாளர் உட்படவர்கள் மற்றும் 2022 ம் ஆண்டு இறுதி காலம் தொடக்கம் 2025 இறுதி காலம் வரைக்கும் இந்த பிரகாசமான எதிர்காலம் யு.கே. அமைப்பும் 2023 பின்னர் பிரகாசமான எதிர்காலம் லங்கா அமைப்புமே.

இந்த உயிரிழை அமைப்புக்காக பெறப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் அமைப்பின் தலைவராக இருந்த கோணேஸ் அல்லது கடாபி, உப தலைவர் இருதயராஜா அல்லது பத்தா, செயலாளர் பொன்கலன், பொருளாளர் கெனடி ஆகியோர் சேர்ந்து உயிரிழை அமைப்பில் இருந்து அனைத்து முள்ளம்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களையும் இந்த இரண்டு அமைப்புக்களுக்கு கொடுத்து இணையவழியில் எங்களுடைய அவையங்கள் அங்க குறைவுகள் விழுத்த புண்களின் படங்களை எடுத்து இணையவழியில் தரவுகளை பதிவுஇறக்கம் செய்து பலம் பெயர்ந்தவர்களிடம் நிதி சேர்த்து வியாபார நோக்கமாக பலகோடி பணத்தை சேர்த்து கொண்டனர்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணத்தை பொருளாளராக இருந்த கடாபியின் தனிப்பட்ட வங்கி கணக்குக்கு 2 கோடிக்கு மேற்பட்ட நிதி போயுள்ளது. இதை வெளிப்படுத்த இந்த தரவை பெற்றபோது அவர்களது இணையம் முடக்கி வைத்துள்ளனர்.

அதேவேளை பிரகாசமான எதிர்காலம் அமைப்பு உயிரிழை நிறுவனத்துடன் பன்றி வளர்ப்பு திட்டத்துக்காக 3 கோடி ரூபா ஒப்பந்தம் செய்துகொண்டனர் இதில் எமது அமைப்பின் யாப்பின் பிரகாரம் அமைப்பில் பிரதிநிததித்துவம் செய்பவரும் எமது அமைப்பின் நிர்வாகத்தில் இருக்க முடியாது.

ஆனால் பிரகாசமான எதிர்காலம் யு.கே. அமைப்பின் தலைவராக 2022 தொடக்கம் கடாபி, உப தலைவர் மற்றும் பொருளாளர் அங்கும் இருந்து வந்துள்ளனர். இவ்வாறு இரு அமைப்பிலும் இந்த உயிரிழை அமைப்பின் தலைவர் செயலாளர் பொருளாளர்களாக இருந்து கொண்டு இரு அமைப்புக்களுக்கும் இடையே ஒப்பந்தம் செய்து 65 இலச்சத்துக்கு மேலான பணத்தை பெற்றுள்ளனர்.

இதில் உயிரிழைக்கு வழங்கப்பட்ட பணம் எந்த வொரு சந்தர்ப்பத்திலும் திரும்ப பெற முடியாது. இதில் வரும் வருவாயில் இருந்து கழுத்துக்கு கீழ் இயங்காத நபர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக தெரிவிக்கப்பட்டு இந்த நிதிகள் சேர்க்கப்பட்டது

மாங்குளத்தில் அமைந்துள்ள பராமரிப்பு விடுதியில் 10 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு இன்று வரை 6 பேர் மட்டுமே சிகிச்சை பெறுவருகின்றனர் அதற்கு மாதம் ஒன்றிற்கு 20 இலச்சம் ரூபா செலவு செய்வதாக காட்டப்படுகின்றது. அவ்வாறே விசேட உணவு என்னும் திட்டத்தின் கீழ் பணம் எடுக்கப்பட்டு மோசடி இடம்பெற்றுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு 14 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதற்கு தீர்வை பெற்றுத்தருமாறு இரண்டு கடிதங்கள் அனுப்பினோம். அதற்கு அவர் எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் உயிரிழைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை நீங்கள் கடிதங்களை மாறி அனுப்பிவிட்டீர்கள் கிழக்கில் நடக்கும் பிரச்சனைக்கும். வடக்கில் நடக்கும் பிரச்சனைக்கும் எந்த தொர்பும் இல்லை என பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதே பிரதேச செயலாளர் கடந்த 8 ம்மாதம் வங்கி நடவடிக்கைக்காக 61 இலச்சம் பணத்தை பெறுவதற்கு கையொப்பம் இட்டு மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

இவைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்கள தலைவர்கள் மற்றும் வடமாகாண ஆளுநர் கடிதம் அனுப்பினோம் எவருமே தீர்வு தரவில்லை.

இதனடிப்படையில் பொது கூட்டத்தில் இவர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் அடிப்படையில் இவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதன்போது தலைவர் கடாபி வங்கி கணக்கில் வைக்கப்பட்ட 65 இலச்சம் ரூபாவை எடுத்துச் சென்றதையடுத்து மாங்குளம் காவல் நிலையத்துக்கு சென்று முறையிட்டு வட்டியுடன் அந்த பணம் திரும்பவும் உயிரிழை அமைப்புக்கு பெற்றுக் கொண்டோம்

புதிய நிர்வாகம் ஒன்றை தெரிவு செய்தோம் பிரகாசமான எதிர்காலம் யு.கே. மற்றும் லங்கா அமைப்புக்கள் அவர்களுக்கு சாதகமாக செயற்பட அந்த நிர்வாகத்தினருக்கு வாழ்வாதரம் என்ற பேர்வையில் 5 இலச்சம் தொடக்கம் 10 இலச்சம் ரூபா வழங்கப்பட்டதுடன் மிக்சர் கம்பனி, தையலகம் என தொடங்கி பணத்தை வீண் விரையம் செய்தனர்.

அதுமட்டுமல்ல மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் தனிநபர் ஒருவர் ஊடாக கடை ஒன்றை திறப்பதற்காக 96 இலச்சம் ரூபா அனுப்பபட்டது. அதனை பெற்றுக் கொண்ட நபர் அதனை தன்னுடைய சொத்தாக மாற்றி கடையை செயற்படுத்தி வருகின்றார். இந்த ஊழலை ஒழிக்க தெரிவு செய்த புதிய நிர்வாகம் அதே ஊழல் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எங்கள் உயிரிழை அங்கத்துவர்கள்.

புலம்பெயர் மக்களால் வெய்யில் பனி குளிர் இரவு பகல் என கஷ்டப்பட்டு உழைத்து எங்களுக்காக அந்த உறவுகள் அனுப்பும் பணம் இப்படி இடைத்தரகர்களால் சூறையாடப்படுகின்றது. அதேவேளை நன்கொடையாக வழங்கப்படும் பணங்கள் தேவையற்ற செலவீனங்களுக்காக செலவு செய்கின்றனர்.

எனவே தயவு செய்து புலம் பெயர்ந்த மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் அதேவேளை பிரகாசமான எதிர்காலம் யு.கே. மற்றும் லங்கா அமைப்புக்கள் செர்க்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் எங்களுடைய 250 பேரின் இயலாமையுள்ள அளுத்த புண்களையும் எங்கள் யுத்த வடுக்களில் உள்ள காயங்களை காட்டியும் பெறப்பட்ட நிதி மீண்டும் எங்களுடைய உயிரிழை அமைப்புக்கு பெற்றுதர வேண்டும்

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கழுத்துக்கு கீழ் இயங்காத 3 பேர் உட்பட 19 பேர் உள்ளனர் எனவே ஒரு முழுமையான நிர்வாகம் மாற்றப்படவேண்டும் எமது அமைப்பான உயிரிழை பாதுகாக்கப்படவேண்டும் இதற்கான தீர்வு தரப்பட வேண்டும் தீர்வு தரும் வரைக்கும் எமது பயனாளிகள் பாதுகாப்ப்படவேண்டும் எங்கள் காயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஊட்டசத்து மற்றும் மருந்துகள் வழங்கப்படவேண்டும் சுகாதரா கட்டமைப்பு மலசல வசதிகள் இல்லை நாற்காலி சக்கரங்கள் இல்லை எனவே இவைகளை உருவக்குதவற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் தீர்மானம் எடுத்துள்ளோம் என்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
Next Post
நாட்டை அழித்த ரணில் – சஜித் ஒன்றிணைவதால் எமது ஆட்சிக்குப் பாதிப்பு இல்லை; நளிந்த கடும் விமர்சனம்

நாட்டை அழித்த ரணில் - சஜித் ஒன்றிணைவதால் எமது ஆட்சிக்குப் பாதிப்பு இல்லை; நளிந்த கடும் விமர்சனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.