தமது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ள நிலையில், மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (31) விசேட நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தை கூட்டவுள்ளது.
இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 48 மணிநேரக் கால அவகாசம் தற்போது நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், இதுவரை அரசாங்கத் தரப்பிலிருந்து எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.








