Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனைவிமார் கந்தளாயில் போராட்டம்

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனைவிமார் கந்தளாயில் போராட்டம்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிவில் பாதுகாப்புப் படை (ஊர்காவல் படை) வீரர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, அவர்களின் மனைவியர் பதாதைகளை ஏந்தி நேற்று முன்தினம் (31) கந்தளாயில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த மாதம் கந்தளாயில் கடமையாற்றிய சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் பலர் கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தீர்மானத்தினால் தமது குடும்ப வாழ்வாதாரமும், பிள்ளைகளின் கல்வியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து 80-க்கும் மேற்பட்ட மனைவியர் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவிக்கையில்,

“ஊர்காவல் படை” என்பது அந்தந்த ஊர்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. அதனை விடுத்து, வீரர்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவது படையின் நோக்கத்திற்கே முரணானது.

போர் காலங்களிலும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் தத்தமது ஊர்களுக்காகப் பாடுபட்டவர்களை இப்போது தூர இடங்களுக்கு மாற்றுவது நீதியற்றது.

வெளி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை உடனடியாக இரத்து செய்து, வீரர்களை மீண்டும் திருகோணமலை மாவட்டத்திற்குள்ளேயே பணியமர்த்த வேண்டும்.

கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை ஆரம்பித்த பெண்கள், பின்னர் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று 87ஆம் கட்டை சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாகமுறைப்பாட்டை முன் வைத்தனர் .

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் கந்தளாய் பொலிஸார் பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 1, 2026
Next Post
ஆண்டுக்கு அதிகமாக சர்க்கரை நுகரும் உலகின் முதல் 10 நாடுகள்

ஆண்டுக்கு அதிகமாக சர்க்கரை நுகரும் உலகின் முதல் 10 நாடுகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு