Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஷ்யாவில் படித்த மாணவனுக்கு வைத்திய பீட அனுமதி மறுப்பு; உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ரஷ்யாவில் படித்த மாணவனுக்கு வைத்திய பீட அனுமதி மறுப்பு; உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ரஷ்யாவில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கையில் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகுவதற்கான தகுதியைப் பெற்றிருந்த இலங்கை மாணவன் ஒருவரை, உள்நாட்டு மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்வதை மறுத்ததன் ஊடாக அவரது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், குறித்த மாணவனை உடனடியாக இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றின் மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

பொரளையைச் சேர்ந்த இசுல தம்சித் ஜயரத்ன என்ற மாணவரே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரணை செய்த பின்னர், நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் சோபித ராஜகருணா ஆகியோரின் இணக்கப்பாட்டுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர இத்தீர்ப்பை அறிவித்துள்ளார்.

தான் கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தை இலங்கை விமானப்படையின் குரூப் கெப்டனாக கடமையாற்றிய போது, ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவி கிடைத்ததை அடுத்து தான் ரஷ்யாவிற்குச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

அங்கு இந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையில் ‘சிரேஷ்ட பாடசாலை சான்றிதழ் பரீட்சையில்’ சித்தியடைந்ததாகவும், அது இலங்கையின் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குச் சமமானது எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

அதன் பின்னர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாக இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடத்தில் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்த போதிலும், அதற்கான நிபந்தனைகளுக்குத் தான் பொருந்தவில்லை எனக் கூறி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார். இதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர், அரச பல்கலைக்கழகமொன்றின் வைத்திய பீடத்தில் அனுமதி பெறுவதற்கான உரிய நிபந்தனைகளின் கீழ் மனுதாரர் தகுதி பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!
செய்திகள்

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

June 17, 2026
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றதாக இருவர் கைது!
செய்திகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றதாக இருவர் கைது!

June 17, 2026
அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!
செய்திகள்

அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

June 17, 2026
அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு
உலக செய்திகள்

அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு

June 17, 2026
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்
செய்திகள்

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்

June 17, 2026
யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

June 17, 2026
Next Post
அவுஸ்திரேலியாவில் இலவாசமாக பட்டப்படிப்பு; இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

அவுஸ்திரேலியாவில் இலவாசமாக பட்டப்படிப்பு; இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு