Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்ள விஜித ஹேரத் தலைமையில் குழு

ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்ள விஜித ஹேரத் தலைமையில் குழு

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மாகாண சபை தேர்தல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உட்பட தேசிய நல்லிணக்க பொறிமுறையின் பூரண விளக்கத்துடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறப்பு இராஜதந்திரிகள் குழு ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்ள உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாக உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு செல்ல உள்ளது.

இதன் போது இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறைகள் குறித்து முழுமையான அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. அத்துடன் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஜெனீவா செல்வதற்கு முன்னர் நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மறுபுறம் தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தினால் வலியுறுத்தப்படும் மாகாண சபை தேர்தலை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கவே அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகின்றது.

தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை போன்ற காரணிகளின் அடிப்படையில் மாகாணசபை தேர்தலை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளது.

அத்துடன் நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக வழிகாட்டுதல் கோரி தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதி செயலகத்திற்கு பல கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் , ஆனால் இதுவரை ஜனாதிபதி செயலகத்திலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவால் எதுவும் செய்ய முடியாது என்பதுடன், தேர்தல் குறித்து முடிவு தற்போது சட்டத் திருத்தங்களை சார்ந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதற்கு அரசாங்கப் பிரதிநிதிகளை நியமிக்க இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே மாகாணசபை தேர்தல் குறித்து ஜெனிவாவில் அரசாங்கம் தெளிவுப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
தரம் 9 வரை கல்வி சீர்திருத்தம்-நளிந்த ஜயதிஸ்ஸ

தரம் 9 வரை கல்வி சீர்திருத்தம்-நளிந்த ஜயதிஸ்ஸ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.