Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2019க்கு முன் வாங்கிய SIM அட்டைகள் மீள்பதிவு; அமைச்சரவை அங்கீகாரம்

2019க்கு முன் வாங்கிய SIM அட்டைகள் மீள்பதிவு; அமைச்சரவை அங்கீகாரம்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத் தொடர்புகள் சட்டத்தின் கீழ், 2019 ஆம் ஆண்டில் சிம் அட்டை பதிவு செய்தல் தொடர்பான ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், அந்த விதிகள் 2019.08.02 ஆம் திகதிக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட சிம் அட்டைகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் அமைந்திருந்தன.

இதனால், அந்தத் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகள் தொடர்பான போதிய தகவல்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இல்லை என்பதும், இது சட்ட விசாரணைகளின் போது சிக்கல்களை ஏற்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைச் சரிசெய்வதற்காகவும், தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப ஒழுங்குவிதிகளைத் திருத்தவும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இத்திருத்தங்களில் பின்வரும் முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்படவுள்ளன:

2019.08.02 திகதிக்கு முன்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளின் தகவல்களை மீளப் பதிவு செய்தல்.

16 – 17 வயதுக்கு இடைப்பட்ட சந்தாதாரர்களைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள்.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்குச் சிம் அட்டைகளை வழங்குவதற்கான புதிய ஏற்பாடுகள்.

இதற்கமைய, சந்தாதாரர் சிம் அட்டை பதிவு செய்தல் தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அத்தியாவசியப் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!
செய்திகள்

அத்தியாவசியப் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!

October 29, 2026
அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!

October 29, 2026
மயிலத்தமடு–மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர் மீது தாக்குதல்!; வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மயிலத்தமடு–மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர் மீது தாக்குதல்!; வைத்தியசாலையில் அனுமதி!

October 29, 2026
கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா!; நடைபெற்ற விசேட கலை நிகழ்வுகள்!
காணொளிகள்

கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா!; நடைபெற்ற விசேட கலை நிகழ்வுகள்!

October 29, 2026
24 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

24 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை!

October 29, 2026
ஈரானின் ஒரு எச்சரிக்கையால் ஆட்டம் காணும் அமெரிக்கா?; உலகையே முடக்கும் இணையக் கேபிள் அச்சுறுத்தல்!
உலக செய்திகள்

ஈரானின் ஒரு எச்சரிக்கையால் ஆட்டம் காணும் அமெரிக்கா?; உலகையே முடக்கும் இணையக் கேபிள் அச்சுறுத்தல்!

October 29, 2026
Next Post
விசேட தேவையுடையவர்களுக்காக 10 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் விரைவில் சேவைக்கு

விசேட தேவையுடையவர்களுக்காக 10 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் விரைவில் சேவைக்கு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு