Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கு தென் கிழக்காக வளிமண்டல தளம்பல் நிலை; 14ஆம் திகதி வரை மழை

இலங்கைக்கு தென் கிழக்காக வளிமண்டல தளம்பல் நிலை; 14ஆம் திகதி வரை மழை

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் 14ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, மேற்கு, வட மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் 14ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, மேற்கு, வட மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.அதேவேளை கிழக்கு, மத்திய, மேல், வட மத்திய மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மீளவும் எதிர்வரும் 16ம் திகதியளவில் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது.

இதனால் மீண்டும் 16 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இலங்கைக்கு அதிக மழை கிடைக்க காரணமாக விளங்குகின்ற மேடன் ஜுலியன் அலைவானது (MJO) எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாக் கடற்பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதனால் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இறுதி நாட்களிலும் மார்ச் மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எனினும் இதனை அடுத்த சில நாட்களிலேயே உறுதிப்படுத்த முடியும்.எனவே இந்த நாட்களைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என தெரிவித்தார்.

(மேடன் ஜுலியன் அலைவு (Madden-Julian Oscillation – MJO) என்பது வெப்பமண்டல வளிமண்டலத்தில் ஏற்படும் ஒரு முக்கிய காலநிலை மாற்றமாகும். இது பெப்ரவரி மாத இறுதியில் வங்காள விரிகுடாவுக்கு நகர்வதால், இலங்கை மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது, குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது)

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யால தேசிய சரணாலயத்தில் விதிகளை மீறிய 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது!
செய்திகள்

யால தேசிய சரணாலயத்தில் விதிகளை மீறிய 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது!

June 15, 2026
சுரேஷ் சலேவை பழிவாங்க வேண்டாம்; அநுர ஆட்சியில் தொடரும் அடக்குமுறைகளை கண்டித்த விஜயதாஸ ராஜபக்ச!
செய்திகள்

சுரேஷ் சலேவை பழிவாங்க வேண்டாம்; அநுர ஆட்சியில் தொடரும் அடக்குமுறைகளை கண்டித்த விஜயதாஸ ராஜபக்ச!

June 15, 2026
மேச்சல் தரை தொடர்பில் மட்டக்களப்பிற்கு வந்து ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி எங்கே?
செய்திகள்

மேச்சல் தரை தொடர்பில் மட்டக்களப்பிற்கு வந்து ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி எங்கே?

June 15, 2026
புளத்சிங்கள பகுதியில் கணவன்–மனைவி மர்ம மரணம்; இரு சடலங்கள் மீட்பு!
செய்திகள்

புளத்சிங்கள பகுதியில் கணவன்–மனைவி மர்ம மரணம்; இரு சடலங்கள் மீட்பு!

June 15, 2026
யாழ் வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கைது!
செய்திகள்

யாழ் வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கைது!

June 15, 2026
வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்
செய்திகள்

வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்

June 15, 2026
Next Post
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கோர விபத்து

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கோர விபத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.