Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் முதல் புதிய வரி!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் முதல் புதிய வரி!

7 months ago
in செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2.5 சதவீதம் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அரோஷ ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அறியப்படுத்தினார்.

இது 2026 வரவுசெலவுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வரியாகும். இந்த வரி அறவீடானது சுங்கத் திணைக்களத்திலேயே மேற்கொள்ளப்படும். தற்போது சுங்கத்தில் விடுவிப்புச் செயற்பாடுகளில் உள்ள வாகனங்களுக்கு இந்த வரி பொருந்தாது.

வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதால், 2.5 சதவீத வரி என்பது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என அரோஷ ரோட்ரிகோ குறிப்பிட்டார்.

எளிமையாகச் சொன்னால், 100 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள ஒரு வாகனத்தின் விலை, இந்த வரி காரணமாக சுமார் இரண்டரை இலட்சம் ரூபாயினால் அதிகரிக்கும். எனவே, இந்த வரிச் சுமையால் வாகன விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.

எவ்வாறாயினும், ‘டித்வா’ புயல் பாதிப்புகளுக்குப் பின்னர், தற்போது மக்கள் மத்தியில் வாகனங்களைக் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சர்வதேச சந்தையில் தேவை அதிகரித்துள்ளதால், அந்த நாட்டில் ஏல விலைகளும் அதிகரித்துள்ளன.

அதன்படி, அரசாங்கத்தின் புதிய வரி மற்றும் சர்வதேச சந்தை விலை உயர்வு ஆகிய இரண்டின் காரணமாகவும், நாட்டில் வாகன விலைகள் எதிர்காலத்தில் நிச்சயமாக அதிகரிக்கும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு