தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஞாயிற்றுக்கிழமை (15) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சிறப்பு வானிலை அறிக்கையானது வெள்ளிக்கிழமை (13) காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மேலதிக தகவல்களைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.








